
புது தில்லி: ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர் வைத்த முறையீட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நிராகரித்துள்ளது.