கேரள அரசுக்கு தக்க பதிலடி: ஸ்மிருதி இரானி எச்சரிக்கை

கேரளத்தில் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உள்பட்ட வகையில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று
கேரள அரசுக்கு தக்க பதிலடி: ஸ்மிருதி இரானி எச்சரிக்கை

கேரளத்தில் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உள்பட்ட வகையில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 சபரிமலை விவகாரத்தில் கேரளத்தில் உச்சக்கட்ட பதற்றம் நீடித்து வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்புத் தெரித்து பாஜகவும், பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், முன்னாள் கேரள பாஜகவின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான முரளிதரனின் இல்லம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்கப்பட்டது. இது தொடர்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஸ்மிருதி இரானி அளித்த பேட்டி:
 கேரளத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சுமார் 37,000 ஐயப்ப பக்தர்கள் கேரள அரசால் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். சுமார் 3,170 ஐயப்ப பக்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐயப்ப பக்தர்கள் மீது சுமார் 1,286 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கேரளத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. பாஜக மாநிலங்களவை உறுப்பினர் முரளிதரனின் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உள்பட்டு, கேரள அரசுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.
 மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியின் கணவர் ராபர்ட் வதேராவின் தனி உதவியாளர் மனோஜ் அரோரா மீது பிணையில் வெளிவர முடியாத ஆணை வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கோரியுள்ளது. லண்டனில் 9 மில்லியன் பவுண்ட் மதிப்பில் ராபர்ட் வதோரா வீடு வாங்கி அதைப் பராமரிக்க 66,000 பவுண்ட் செலவு செய்துள்ளார். இது முழுக்க கருப்புப் பணம் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் ராபர்ட் வதேராவை விசாரிக்க வேண்டும் என்றார் ஸ்மிருதி இரானி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com