குடியுரிமை மசோதாவால் உங்கள் உரிமை பாதிக்கப்படாது: வடகிழக்கு மாநில மக்களுக்கு உறுதியளித்த பிரதமர் மோடி  

சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை மசோதாவால் உங்கள் உரிமை பாதிக்கப்படாது என்று வடகிழக்கு மாநில மக்களுக்கு பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். 
குடியுரிமை மசோதாவால் உங்கள் உரிமை பாதிக்கப்படாது: வடகிழக்கு மாநில மக்களுக்கு உறுதியளித்த பிரதமர் மோடி  

சோலாப்பூர்: சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை மசோதாவால் உங்கள் உரிமை பாதிக்கப்படாது என்று வடகிழக்கு மாநில மக்களுக்கு பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். 

மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்டம் - 1955 ல் திருத்தங்கள் செய்து மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த திருத்தத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  

நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அம்மசோதாவானது  சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அப்போதே இதற்கு அசாமில் எதிர்ப்பு எழுந்தது.  இந்த மசோதாவை செவ்வாயன்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தாக்கல் செய்தார்.  விவாதத்துக்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. 

தற்போது மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேசமயம் தொடர்ந்து இந்த மசோதாவிற்கு எதிராக அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில்  சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை மசோதாவால் உங்கள் உரிமை பாதிக்கப்படாது என்று வடகிழக்கு மாநில மக்களுக்கு பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். 

இதுதொடர்பாக மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, 'குடியுரிமை  மசோதாவை தாக்கல் செய்வதால் அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநில மக்களின் உரிமை பாதிக்கப்படாது என்று நான் உறுதியளிக்கிறேன்' என்று பேசினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com