ஆளில்லா 2 விண்கலங்களை அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

2020ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2021ம் ஆண்டு ஜூலையிலும் இரண்டு ஆளில்லா விண்கலங்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருப்பதாக அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ஆளில்லா 2 விண்கலங்களை அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி


பெங்களூரு: 2020ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2021ம் ஆண்டு ஜூலையிலும் இரண்டு ஆளில்லா விண்கலங்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருப்பதாக அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், 2019ம் ஆண்டு இஸ்ரோவில் 17 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதில் 2 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் திட்டமும் அடங்கும்.

2020ம் ஆண்டு டிசம்பரில் ஒரு விண்கலமும், 2021 ஜூலையில் 2வது விண்கலமும் விண்ணுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்வெளி வீரர்களுடன், விண்கலத்தை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இது இஸ்ரோவின் மிகப் பெரிய திருப்பு முனை திட்டமாகும். ககன்யான் திட்டத்தின் ஆரம்பக் கட்ட பயிற்சி இந்தியாவிலும், உயர்மட்ட பயிற்சிகள் ரஷ்யாவிலும் அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் பெண் விண்வெளி ஆய்வாளர்களும் இடம்பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com