தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரிய ராகேஷ் அஸ்தானாவின் மனு தள்ளுபடி 

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளியன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரிய ராகேஷ் அஸ்தானாவின் மனு தள்ளுபடி 

புதுதில்லி: தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளியன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கில் இருந்து தன்னை விடுவிப்பதற்காக, சிபிஐ சிறப்பு இயக்குநருக்கு லஞ்சம் கொடுத்ததாக, ஹைதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா, காவல் துறையிடம் புகார் கொடுத்தார்.


அஸ்தானா பணம் கேட்டு மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதையடுத்து, ராகேஷ் அஸ்தானா, அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் காவல் துறை டிஎஸ்பி தேவேந்திர குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக சிபிஐயும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதையடுத்து, தங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி, தில்லி உயர்நீதிமன்றத்தில் ராகேஷ் அஸ்தானா, தேவேந்திர குமார் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, அனைத்து சட்ட விதிமுறைகளையும் பின்பற்றியே ராகேஷ் அஸ்தானா உள்ளிட்டோர் மீது லஞ்ச ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா வாதிட்டார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அஸ்தானா தாக்கல் செய்த மனு மீதான மீதான தீர்ப்பை நீதிபதி நஜ்மி வாஜிரி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளியன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இந்த வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தபோது ராகேஷ் அஸ்தானா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ராகேஷ் அஸ்தானா மற்றும் தேவேந்திர குமாருக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com