பத்திரிகையாளர் கொலை வழக்கு: சாமியார் குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி என்று தீர்ப்பு 

செய்தியாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி என்று பஞ்ச்குல்லா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
பத்திரிகையாளர் கொலை வழக்கு: சாமியார் குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி என்று தீர்ப்பு 

புது தில்லி: செய்தியாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி என்று பஞ்ச்குல்லா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவரான சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்  20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு ஹரியாணா மாநிலம் சனாரியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் செய்தியாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி என்று பஞ்ச்குல்லா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சாமியாரின் ஆசிரமத்தில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களை வெளிக்கொண்டு வந்த செய்தியாளர் ராம் சந்தர் சத்ரபதி என்பவரும் படுகொலை செய்யப்பட்டார். 15 வருடங்களுக்கு முன்னர் பெண் பக்தர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தொடர்பாக ஆசிரமங்களில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக எழுதிய அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நகர்வே குர்மீத் ராமிற்கு எதிரான நடவடிக்கைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. 

இந்த நிலையில் செய்தியாளர் ராம் சந்தர் சத்ரபதி கொலை தொடர்பாக அவரது மகன் அன்சுல் தொடர்ந்த வழக்கு  பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியது. இந்த வழக்கில்தான்  குர்மீத் ராம் ரகீம் சிங்கை கோர்ட் குற்றவாளி என நீதிமன்றம் தற்போது தீர்ப்பு கூறி உள்ளது. தண்டனை விபரம் வருகிற 17 ந்தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com