சுடச்சுட

  

  தில்லியில் பரபரப்பு: முதல்வர் கேஜரிவாலின் மகள் கடத்தப்பட உள்ளதாக இ-மெயிலில் மிரட்டல்

  By DIN  |   Published on : 12th January 2019 09:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  aravinth


  புதுதில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மகளை கடத்தப்பட உள்ளதாக முதல்வர் அலுவலகத்துக்கு இ-மெயிலில் மர்ம நபர்கள் விடுத்துள்ள மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். 

  தில்லி முதல்வர் அலுவலகத்துக்கு கடந்த புதன்கிழை (ஜன.9) மர்ம இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், தில்லி முதல்வரின் மகளை கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வரின் மகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது. 

  மிரட்டல் இ-மெயில் அனுப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து தில்லி சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
  முதல்வரின் மகளை கடத்தப்போவதாக வந்துள்ள மர்ம கடிதத்தால் தில்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai