சுடச்சுட

    

    பெங்களூருவாசிகளாக இருந்தால் இது மகிழ்ச்சிதரும் செய்திதான்

    By DIN  |   Published on : 12th January 2019 12:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bmrcl


    பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் பயணிகளிடம் இருந்து தொடர்ந்து வந்த புகார்களின் காரணமாக, ஜனவரி 13ம் தேதி முதல் ரயில் புறப்படும் நேரத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

    பொதுவாக பெங்களூரு மெட்ரோ ரயில், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8 மணிக்குத்தான் முதல் சேவையைத் தொடங்கும்.

    8 மணி என்பது மிகவும் தாமதமான நேரம். அன்றைய தினம் பணிக்குச் செல்வோருக்கு இது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளதாக பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். காலை 5 மணிக்கு சேவையைத் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்தன.

    இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, ஜனவரி 13ம் தேதி அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை முதல், மெட்ரோ ரயில் சேவையை காலை 8 மணிக்கு பதிலாக 7 மணிக்குத் தொடங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக பிஎம்ஆர்சிஎல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai