சுடச்சுட

  
  petrol


  இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை உயர்ந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 20 காசுகளும், டீசல் விலை 30 காசுகளும் உயர்ந்தன. 
  சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.71.67-ஆகவும், டீசலின் விலை ரூ.66.31-ஆகவும் இருந்தது. தில்லியில் பெட்ரோல் விலை 19 காசுகள் உயர்ந்து ரூ.69.07-க்கும், டீசல் 28 காசுகள் உயர்ந்து ரூ.62.81-க்கும் விற்பனையானது.
  ஏற்கெனவே, கடந்த 7, 10 ஆகிய தேதிகளில் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்த நிலையில் தற்போது 3-ஆவது முறையாக விலை உயர்ந்துள்ளது.
  முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.33 என்ற உச்ச விலையில் இருந்தது. அதே மாதம் 17-ஆம் தேதி டீசல் விலை உச்சத்தை எட்டி, ஒரு லிட்டர் ரூ.80.04-க்கு விற்பனையானது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டன. இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான வரியை ரூ.2.50 வரை குறைத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
  இதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து குறைந்தது. கடந்த இரண்டரை மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.14.54-ம், டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ. 13.53-ம் குறைந்துள்ளது.
  உலக அளவில் கச்சா எண்ணெய் அதிகமாக இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai