சுடச்சுட

  

  முதலை மறைவால் சோகத்தில் மூழ்கிய கிராமம்: மக்கள் திரளாக கலந்துகொண்டு அஞ்சலி

  By DIN  |   Published on : 12th January 2019 12:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  crocodile,_named_‘Gangaram_at_the_funeral_ceremony_2

   

  முதலை மறைவு காரணமாக சோகத்தில் மூழ்கிய கிராமத்தினர் திரளாக கலந்துகொண்டு அதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

  சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பேமேதாரா மாவட்டத்தில் பாவா மொதாரா கிராமம் உள்ளது. இங்குள்ள நீர்நிலையில் வாழ்ந்து வந்த மிகப்பெரிய முதலை சனிக்கிழமை உயிரிழந்தது. அதற்கு வயது 130 ஆகும்.

  கங்காராம் என்ற பெயர் கொண்ட அந்த முதலை பாவா மொதாரா கிராம மக்களிடையே மிகப் பிரபலம். இந்நிலையில், அந்த முதலையின் மறைவு கிராம மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. 

  இதையடுத்து அந்த நீர்நிலையின் அருகிலேயே கங்காராம் என்ற அந்த முதலைக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கிராமத்தினர் அனைவரும் திரளாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai