சுடச்சுட

  
  trump


  வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) குறித்த விதிமுறைகளை எளிமையாக்குவதாகவும், அந்த விசாவில் வருபவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
  இது, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு சாதகமான அறிவிப்பு என்று கூறப்படுகிறது.
  இதுகுறித்து தனது சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது:
  ஹெச்-1பி விசா தொடர்பான விதிமுறைகளை எளிமையாக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று, அந்த விசா மூலம் அமெரிக்கா வந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.
  மேலும், ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான வாய்ப்பை அதிகரிப்பதோடு, அவர்கள் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான பாதைக்கும் அவர்களை இட்டுச் செல்லும் வகையிலான மாற்றங்களும் மேற்கொள்ளப்படும் என்று தனது சுட்டுரைப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai