சுடச்சுட

  
  yogi

  பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து எந்தவொரு மகா கூட்டணி அமைந்தாலும் அது நாட்டில், ஊழல், அரசியல் ஸ்திரமின்மை ஆகியவற்றுக்கே வழிவகுக்கும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை கூறினார்.
   வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக போட்டியிடுவதற்காக, சமாஜவாதி கட்சியும், பகுஜன்சமாஜ் கட்சியும் கூட்டணி அமைப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதையடுத்து யோகி ஆதித்யநாத் இவ்வாறு கூறியுள்ளார்.
   தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக மாநாட்டில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
   ஒருவரை ஒருவர் வெறுத்து வந்தவர்கள் தற்போது மகா கூட்டணி அமைக்கின்றனர். பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது, ஊழல் செய்வதற்காகத்தான். இந்த கூட்டணி, நாட்டில் அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்கும். 50 ஆண்டுகாலமாக நாட்டின் வளர்ச்சியை முடக்கிவிட்டு, குடும்பத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்த காங்கிரஸ், ஜாதியத்தை ஊக்குவித்தது. அதிலிருந்து நாட்டை மீட்டு, அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடி வித்திட்டார்.
   2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலைவிட , வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக சிறப்பாகச் செயல்படும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மீண்டும் தகுதியான, வலிமையான அரசு அமையும். கிராமத்துப் பெண்கள், ராணுவ வீரர், விவசாயி, இளைஞர் என்று எந்த தரப்பு மக்களைக் கேட்டாலும், அவர்கள் மோடியை மீண்டும் பிரதமராக கொண்டு வருவதில் உறுதியாக உள்ளார்கள் என்பது தெரிய வரும் என்று கூறினார்.
   மோடி அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட ஆதித்யநாத், மோடி தலைமையிலான ஆட்சியில், மக்களுக்கு நம்பிக்கை, தேசிய உணர்வு உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai