சுடச்சுட

  

  சென்னை-பெங்களூரு விரைவு ரயில் மைசூரு வரை நீட்டிப்பு

  By  பெங்களூரு,  |   Published on : 13th January 2019 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  train

  சென்னை-பெங்களூரு விரைவு ரயில் மைசூரு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில் எண்: 12609-சென்னை-பெங்களூரு விரைவுரயில் மைசூரு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயிலின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
   அதன் விவரம்: ரயில் எண்: 12609-சென்னை-பெங்களூரு விரைவுரயில் ஜன. 15-ஆம் தேதி முதல் மைசூரு ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. இதன்படி, இந்த ரயில் சென்னையில் இருந்து நண்பகல் 1.35 மணிக்குப் புறப்பட்டு, மாலை 6.05 மணிக்கு பெங்களூரு வந்தடையும். அங்கிருந்து மாலை 6.10 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் இரவு 11.30 மணிக்கு மைசூரு ரயில் நிலையம் சென்றடையும்.
   மறுமார்க்கத்தில், ரயில் எண்: 12610-பெங்களூரு-சென்னை விரைவு ரயில் ஜன. 16-ஆம் தேதி முதல் பெங்களூரு ரயில் நிலையத்துக்குப் பதிலாக மைசூரில் இருந்து புறப்படும். ரயில் எண்: 12610-மைசூரு-சென்னை விரைவு ரயில் மைசூரு ரயில் நிலையத்தில் இருந்து தினமும் காலை 4.45 மணிக்குப் புறப்பட்டு, அன்று காலை 7.45 மணிக்கு பெங்களூரு வந்தடையும். பெங்களூரில் இருந்து காலை 8.02 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், அன்று நண்பகல் 2.30 மணிக்கு சென்னை ரயில் நிலையம் சென்றடையும்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai