சுடச்சுட

  

  ஜன.21-இல் திருமலையில் ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி

  By  திருப்பதி,  |   Published on : 13th January 2019 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருமலையில் வரும் 21-ஆம் தேதி ராமகிருஷ்ணதீர்த்த முக்கோட்டி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
   புராணங்களின் கூற்றுப்படி, திருமலையில் 3 கோடியே 50 லட்சம் தீர்த்தங்கள் உள்ளன. அந்தப் புண்ணிய தீர்த்தங்களில் ஏழுமலையில் ஏற்படுத்தப்பட்ட சப்த தீர்த்தங்கள்(7 தீர்த்தங்கள்) மிகவும் முக்கியமானவை. அவற்றில் புனித நீராடினால் அனைத்து பாவங்களும் தொலைந்து முக்தி கிடைக்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   சப்த தீர்த்தங்களின் ஒன்றான ராமகிருஷ்ண தீர்த்தத்துக்கு ஆண்டுதோறும் தை மாத பௌர்ணமி அன்று முக்கோட்டி உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
   அதன்படி வரும் 21-ஆம் தேதி ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடைபெற உள்ளது. அன்று இதில் நீராடினால் பெற்றோர்கள், குருநாதர்கள் உள்ளிட்டோரை இகழ்ந்த பாவங்கள் போகும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai