சுடச்சுட

  

  தமிழ் மொழி பேசத்தெரியாத துரதிர்ஷ்டசாலியாக உள்ளேன்: பிரதமர் மோடியின் அசத்தல் பேச்சு

  By DIN  |   Published on : 13th January 2019 08:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  PM_Modi_PTI

   

  புதுதில்லி: மொழி மிகவும் முக்கியம் என்றும், நான் எப்பொழுதும் தமிழ் மொழியின் ரசிகன். ஆனால், தமிழ் மொழி பேசத்தெரியாத துரதிர்ஷ்டசாலியாக நான் உள்ளேன் என்று தமிழக பாஜகவினருடனான காமொளி காட்சி மூலமான கலந்துரையாடலில் அசத்தலாக பேசினார் பிரதமர் மோடி. 

  வரும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்து மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, பெரம்பலூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகளைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். 

  அப்போது பேசிய அவர், மொழி மிகவும் முக்கியம் எனவும், நான் எப்பொழுதும் தமிழ் மொழியின் ரசிகன் எனவும், ஆனால், தமிழ் மொழி பேசத் தெரியாத துரதிர்ஷ்டசாலியாக நான் உள்ளேன் என்றார்.  

  மேலும், சிறு நிறுவனங்களின் முன்னேற்றமே நமது பிரதான இலக்கு. சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக ஒப்புதல் மற்றும் மின் இணைப்பு வழங்கி வருகிறோம். நாம் நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நிலையிலும் பாடுபட்டு வருகிறோம். மறுபுறத்தில் உள்ளவர்கள் தங்களுக்கென்ற சொந்த சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்காக பரம்பரை கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணிக்காக அணி திரண்டு உள்ளனர். மற்ற கட்சிகளைப்போல் ஓட்டு வங்கியை உருவாக்குவதற்காக நாம் பிரித்தாளும் அரசியலை நடத்தவில்லை. 

  பாஜகவுக்கு எதிராக அமையும் எந்த கூட்டணியும் நிலைக்காது. அது சுயநலத்துக்கான குறுகியகால கூட்டணியாக முடிந்துப் போகும். 

  பாஜகவின் வெற்றி, மோடி, அமித்ஷாவினால் கிடைத்தது அல்ல. நிர்வாகிகள், தொண்டர்கள், பூத் கமிட்டியினரின் கடும் முயற்சியால் கிடைத்தது. நீங்கள் கடுமையாக முயற்சித்தால் வெற்றி கிடைக்கும். அனைவரும் ஒன்றாக இணைந்து, நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர செயல்பட வேண்டும். அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லி மிகப்பெரிய வெற்றி கிடைக்க பாடுபட வேண்டும்.

  பாஜகவில் மட்டுமே சாதாரண மக்கள் கூட உயர்பதவிக்கு வர முடியும் என்ற மோடி, தமிழக பாஜக தலைவர் கடினமாக உழைக்கக்கூடியவர் என தமிழிசைக்கு பாராட்டு தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai