சுடச்சுட

  

  தில்லியில் பாஜகவுக்கு பாடம் புகட்டுவோம்

  By நமது நிருபர், புது தில்லி,  |   Published on : 13th January 2019 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  aravind_kejriwal

  வரும் மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சி பாடம் புகட்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
  வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தொகுதி வாரியாக ஆம் ஆத்மி நிர்வாகிகளை முதல்வரும், ஆம் ஆத்மிக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான கேஜரிவால் சந்தித்து வருகிறார். அந்த வகையில், கிழக்கு தில்லி நிர்வாகிகளை சனிக்கிழமை அவர் சந்தித்தார். அப்போது, கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியின் ஆம் ஆத்மி பொறுப்பாளர் அதிஷி, தில்லி ஆம் ஆத்மி அமைப்பாளர் கோபால் ராய் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்தக் கூட்டத்தில் கேஜரிவால் பேசியது:
  வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தில்லியின் 7 மக்களவைத் தொகுதியிலும் ஆம் ஆத்மி தகுந்த பாடம் கற்பிக்கும். மத்தியில் ஆளும் அரசு ஊழலை ஒழிக்க எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே தில்லி அரசை இயங்க விடாமல் பல்வேறு விதமான முட்டுக்கட்டைகளை மத்திய அரசு போட்டு வருகிறது. ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். என் மீதும் சிபிஐயை மத்திய அரசு ஏவியது. ஆனால், தில்லியில் சுகாதாரம், கல்வியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்.
  ஊழல் இல்லாத தில்லியை உருவாக்கிவிட்டோம். ஆனால், ஊழல் இல்லாத இந்தியா என்பது இன்னும் கனவாகவே உள்ளது. ஊழலை காங்கிரஸ் கட்சி ஆரம்பித்தது. அதை பாஜகவும் தொடர்கிறது.
  கடந்த தேர்தலில் ஊழல் கட்சியான காங்கிரûஸ மக்கள் நிராகரித்தனர். ஆனால், மத்தியில் காங்கிரஸ் கட்சியை விட மோசமான மோடி- அமித் ஷா கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ளது. அவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் ஆட்சி செய்து வருகின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜகவுக்கு ஆம் ஆத்மி பாடம் புகட்டும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai