சுடச்சுட

    

    தேடப்பட்ட பயங்கரவாதி ஜம்மு-காஷ்மீரில் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி

    By DIN  |   Published on : 13th January 2019 12:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Kulgam_Encounter_Jan13

     

    ஜம்மு-காஷ்மீரில் தேடப்பட்ட பயங்கரவாதி உட்பட 2 பேர் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை தடுக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினா் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் ரகசிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். 

    அவர்கள் தேடப்பட்டு வந்த அல்-பாதர் பயங்கரவாத அமைப்பின் தளபதி ஜீனத்-உல்-இஸ்லாம் மற்றும் அவனது கூட்டாளி ஷகீல் தார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai