சுடச்சுட

  

  புதுச்சேரியிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை:  மார்ச் 1-ம் தேதி முதல் அமல் 

  By DIN  |   Published on : 13th January 2019 05:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Plastic_Ban_July12

   

  புதுச்சேரி: தமிழகத்தை தொடந்து புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மார்ச் 1-ம் தேதி முதல் தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு  தடிமன் வரை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு, கடந்த 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அது கூடுமானவரை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.  

  இந்நிலையில் தமிழகத்தை தொடந்து புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மார்ச் 1-ம் தேதி முதல் தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூடி முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிப்பது என்றும், இந்த தடையானது வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும்  முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai