10% சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் நாளை முதல் அமல்: முதல்வர் விஜய் ருபானி அறிவிப்பு

பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர்
10% சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் நாளை முதல் அமல்: முதல்வர் விஜய் ருபானி அறிவிப்பு


அகமதாபாத்: பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை அளித்துள்ளதை அடுத்து நாளை திங்கள்கிழமை முதல் (ஜன.14) குஜராத்தில் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் விஜய் ருபானி அறிவித்துள்ளார். 

பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. "அரசியலமைப்பு (103ஆவது திருத்தம்) சட்டம்-2019க்கு (இட ஒதுக்கீடு மசோதா), நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த 9 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு அதை மத்திய அரசு அனுப்பியது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டம், மத்திய அரசு அறிவிக்கும் நாள் முதல் அமலுக்கு வரும்' எனத் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் நேற்றில் இருந்து இந்த சட்டம் அமலுக்கு வந்தது. 

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் நாளை திங்கள்கிழமை முதல் (2019 ஜன.14) அமல்படுத்தப்படும் குஜராத் முதல்வர் விஜய் ருபானி அறிவித்துள்ளார். 

முதல்வரின் அறிவிப்பின் மூலம் இந்த சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக குஜராத் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com