என்னை மிரட்டி துன்புறுத்தி முஸ்லிம் மதத்துக்கு மாற்றினர்: ராஜஸ்தான் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு

ராஜஸ்தானைச் சேர்ந்த தன்னை மிரட்டி, முஸ்லிம் மதத்துக்கு மாற்றியதாக பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
என்னை மிரட்டி துன்புறுத்தி முஸ்லிம் மதத்துக்கு மாற்றினர்: ராஜஸ்தான் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு

ராஜஸ்தானைச் சேர்ந்த தன்னை மிரட்டி வெற்றுக் காகிதங்களில் கையெழுத்திட வைத்து காஷ்மீரில் முஸ்லிம் மதத்துக்கு மாற்றியதாக பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், தனது நிலை குறித்து பார்மர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

கடந்த 9 மாதங்களுக்கு முன்பு என்னை ஒருவர் ஜம்மு-காஷ்மீரின் குபுவாரா மாட்டத்துக்கு கடத்திச் சென்றார். அங்கு என்னிடம் வெற்றுக் காகிதங்களில் கையெழுத்துப் பெற்று அதன்மூலம் என்னை கட்டாயப்படுத்தி முஸ்லிம் மதத்துக்கு மாற்றினார். மேலும் போலி திருமணச் சான்றுகளை தயாரித்து என்னை மிரட்டியும், அடித்து துன்புறுத்தவும் செய்தார்.

அதுமட்டுமல்லாமல் என்னை துபை அழைத்துச் செல்லவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நான் தற்போது அங்கிருந்து தப்பித்து வீடு திரும்பியுள்ளேன் என்றார்.

இதுகுறித்து பார்மர் போலீஸ் எஸ்.பி. ராஷி தோக்ரா கூறியதாவது, இதுகுறித்து விசாரிக்க அதிகாரிகள் சிலர் ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்கும் எனத் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com