தேர்தல் அதிகாரிகளை கண்காணிக்க செயலி

தேர்தல் அதிகாரிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு புதிய செயலியை சத்தீஸ்கர் மாநில தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.

தேர்தல் அதிகாரிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு புதிய செயலியை சத்தீஸ்கர் மாநில தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.
 சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலின்போது, அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் அதிகாரிகள் சென்றதாகவும், ஹோட்டல்களில் திடீரென தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்துவதாகவும் செய்திகள் வெளியாகின.
 இந்த சூழ்நிலையில், சத்தீஸ்கர் தேர்தல் ஆணையத்தால், தேர்தல் அதிகாரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் ஆயத்தப் பணியை மேற்கொள்வது குறித்து ஆலோசிப்பதற்கு, தில்லியில் அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சத்தீஸ்கர் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள செயலி காண்பிக்கப்பட்டது.
 இதேபோல், குழந்தைகளுடன் வரும் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் கூட்டமில்லாத வாக்குச்சாவடிகள் வாக்குப்பதிவு செய்வதை உறுதி செய்யும் வகையில் புதிய செயலியை மத்தியப் பிரதேச தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இது குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசுகையில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரம் ஆகியவற்றை பயன்படுத்துவது குறித்து வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இது வாக்காளர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்க செய்யும்' என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com