மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும்: சுஷ்மா அறிவிப்பு

இந்தியா-மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் இடையிலான முதலாவது பேச்சுவார்த்தை உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும்: சுஷ்மா அறிவிப்பு


சமர்கண்ட்: இந்தியா-மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் இடையிலான முதலாவது பேச்சுவார்த்தை உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ், மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். 

இந்தியா-மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுடனான பிராந்தியப் பிரச்னைகள், வர்த்தகம், பொருளாதார உறவுகள் உள்ளிட்டவை தொடர்பான முதலாவது பேச்சுவார்த்தை உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் அந்தந்த நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும், கஜகஸ்தானின் முதல் வெளியுறவுத் துறை துணை அமைச்சரும் பங்கேற்றுள்ளனர். 

இதில், கலந்துகொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசிகையில், சமர்கண்டில் நடைபெறும் இந்த இந்தியா-மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான மாநாட்டில் ஆப்கானிஸ்தானும் பங்கு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த உஸ்பெகிஸ்தான் அரசுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என தெரிவித்தார் சுஷ்மா.

இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் தெற்காசிய நாடுகள் ஆகும்.

மத்திய ஆசிய நாடுகளுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுஷ்மா ஸ்வராஜ் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com