காங்கிரஸின் அதிருப்தி எம்எல்ஏக்கள் யாரும் பா.ஜ.க.வின் தொடர்பில் இல்லை

காங்கிரஸின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் யாரும் பா.ஜ.க.வின் தொடர்பில் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.
காங்கிரஸின் அதிருப்தி எம்எல்ஏக்கள் யாரும் பா.ஜ.க.வின் தொடர்பில் இல்லை

காங்கிரஸின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் யாரும் பா.ஜ.க.வின் தொடர்பில் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.
 இதுகுறித்து தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 காங்கிரஸின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள், தில்லிக்கு வந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் உண்மையில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் தில்லிக்கு வரவில்லை.
 காங்கிரஸின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் யாரும் பாஜகவின் தொடர்பில் இல்லை. கூட்டணி ஆட்சியில் நடைபெறும் குழப்பங்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
 காங்கிரஸ், மஜத கட்சியினர் தாங்கள் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்காக பாஜக மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். கர்நாடக அரசியலில் தற்போது நிலவும் சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். கூட்டணி ஆட்சியில் நிலவும் குழப்பத்தால், இந்த ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும் என்றார்.
 மேலும், மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. தேர்தல் பணிகள் தொடங்கினால், போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை கட்சியின் மேலிடம் முடிவு செய்யும். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமர் மோடியை மீண்டும் பதவியில் அமர்த்துவதே எங்கள் நோக்கமாக உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com