சஜ்ஜன் குமாரின் மேல்முறையீட்டு வழக்கு: சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தில்லி உயர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து, சஜ்ஜன் குமார் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  
சஜ்ஜன் குமாரின் மேல்முறையீட்டு வழக்கு: சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்


தில்லி உயர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து, சஜ்ஜன் குமார் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

சீக்கியர்களுக்கு எதிரான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு தில்லி உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி ஆயுள தண்டனை விதித்தது. இதையடுத்து, தில்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சஜ்ஜன் குமார் மேல்முறையீடு செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எஸ்கே கௌல் ஆகியோர் அடங்கி அமர்வு முன் இன்று (திங்கள்கிழமை) விசாரணை வந்தது. 

அப்போது, இதுதொடர்பாக பதிலளிக்குமாறு ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், சஜ்ஜன் குமாரின் ஜாமீன் மனு தொடர்பாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.    

வழக்கு விவரம்: 

கடந்த 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அவரது சீக்கிய பாதுகாவலர்கள் 2 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சீக்கியர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் மூண்டது. இதில் தில்லியின் ராஜ்நகர் பகுதியில் நடைபெற்ற கலவரத்தின்போது 5 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

இதேபோல், அங்குள்ள குருத்வாராவும் தீவைத்து கொளுத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சஜ்ஜன் குமார் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வெளியிட்டது. அதில் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 

இதனால் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சஜ்ஜன் குமார் விலகினார். இதனிடையே, தில்லி உயர் நீதிமன்றத்தில் தாம் சரண் அடைவதற்கு விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை ஜனவரி மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கக்கோரி சஜ்ஜன் குமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து, கடந்த 31-ஆம் தேதி அவர் சரணடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com