மேற்கு வங்கத்தில் பாஜக ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

மேற்கு வங்கத்தில்  42 தொகுதிகளை வலம் வரும் வகையில் பாஜக நடத்த திட்டமிட்டிருந்த  ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .
மேற்கு வங்கத்தில் பாஜக ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

மேற்கு வங்கத்தில்  42 தொகுதிகளை வலம் வரும் வகையில் பாஜக நடத்த திட்டமிட்டிருந்த  ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளையும் வலம் வரும் வகையில் 3 இடங்களில் ரத யாத்திரையை தொடங்கி, ஒன்றரை மாதங்களுக்கு யாத்திரையை நடத்த பாஜக திட்டமிட்டது.
பாஜகவின் இந்தரத யாத்திரையால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும், மத ரீதியிலான பதற்றம் ஏற்படும் என்று கூறி மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு அனுமதி மறுத்தது.
இதை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் யாத்திரைக்கு அனுமதியளித்தது.

மேலும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு யாத்திரை நடத்தப்பட வேண்டும் என்றும், இயல்பான வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படக் கூடாது என்றும் பாஜகவினருக்கு உத்தரவிட்டது. பொதுச் சொத்துகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமானால் பாஜகவே அதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.  

மேலும் சட்டம்-ஒழுங்கை காக்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
ஆனால் கொல்கத்தா உயர்நீதிமன்றம் அளித்த அனுமதியை எதிர்த்து அந்த மாநில அரசு அதேநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஒரு நீதிபதி அமர்வு வழங்கிய அனுமதியை ரத்து செய்தது.

மேலும் பாஜகவின் ரத யாத்திரை தொடர்பாக மாநில உளவுத்துறையினர் அளித்துள்ள அறிக்கையை பரிசீலனை செய்ய அறிவுறுத்தியது.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க பாஜக சார்பில் மனு தாக்கல் செய்தது. அந்த   மனுவில் அமைதியான முறையில் ரத யாத்திரை நடத்துவது மக்களின் அடிப்படை உரிமை. அதை யாரும் தடுக்கக் கூடாது. மேற்கு வங்கத்தில் பல்வேறு அமைப்புகள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பல முறை அரசு மறுத்துள்ளது.

அப்போதெல்லாம் நீதிமன்றத்தை நாடி அவர்கள் அனுமதி பெற்றனர்.  எனவே ரத யாத்திரை மேற்கொள்ளும் விவகாரத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஜக கூறியிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்.கே. கெளல் தலைமையிலான அமர்வு ரதயாத்திரை குறித்த திட்ட வடிவத்தை மாற்றி மேற்கு வங்க அரசின் பரிசீலனைக்கு வைக்குமாறு மாநில பாஜக தலைவருக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து பாஜகவின் மனு குறித்து பதிலளிக்குமாறு மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி  15-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு ரத யாத்திரையால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என மாநில அரசு கவலை தெரிவித்துள்ளதை ஒதுக்க முடியாது. 

அரசியல் சாசன அடிப்படை உரிமையின் படி  பா.ஜ.,வின்  ரத யாத்திரை திட்டத்தை மேற்கு வங்க அரசு பரிசீலித்து   ரத யாத்திரை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்காத வகையில் ரத யாத்திரைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com