கர்நாடக தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.122 கோடி செலவிட்ட பாஜக !

கர்நாடக தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக ரூ.122 கோடி செலவு செய்த விவரம் வெளியாகியுள்ளது.


கர்நாடக தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக ரூ.122 கோடி செலவு செய்த விவரம் வெளியாகியுள்ளது.
கர்நாடகம் மற்றும் மேகாலயம், திரிபுரா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநில தேர்தல் பிரசாரத்துக்கு செலவு செய்த தொகை குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் பாஜக தாக்கல் செய்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கர்நாடக தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.122.68 கோடி பாஜக செலவிட்டுள்ளது. அதில் ரூ.84 கோடியை மட்டும், அச்சு பத்திரிகை, மின்னணு ஊடகம், குறுந்தகவல், கேபிள், இணையதளங்கள் மூலம் விளம்பரம் மேற்கொள்ள கட்சி செலவிட்டுள்ளது. இதுதவிர, நட்சத்திர பிரமுகர்கள் பிரசாரம் செய்ய ரூ.16 கோடியையும் பாஜக செலவிட்டுள்ளது.
3 வடகிழக்கு மாநில தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக ரூ.14.18 கோடி செலவிட்டுள்ளது. இதில் மேகாலயத்தில் மட்டும் ரூ.3.8 கோடியும், திரிபுராவில் ரூ.6.96 கோடி, நாகாலாந்தில் ரூ.3.36 கோடியும் பாஜக செலவு செய்துள்ளது. நட்சத்திர பிரமுகர்கள் பிரசாரம், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆன செலவும் இதில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com