குதிரை பேரத்தில் முதல்வர் குமாரசாமிதான் ஈடுபடுகிறார்: எடியூரப்பா ஆவேசம்!

ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. அதற்கு குதிரைபேரத்தில் ஈடுபடுவது சரியா? பாஜக, ஜனநாயகத்துக்கு எதிரான
குதிரை பேரத்தில் முதல்வர் குமாரசாமிதான் ஈடுபடுகிறார்: எடியூரப்பா ஆவேசம்!


பெங்களூரு: குதிரை பேரத்தில் முதல்வர் குமாரசாமிதான் ஈடுபடுகிறார் என்று கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 7 மாதங்களை நிறைவு செய்துள்ள முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு தற்போது சிக்கலான அரசியல் சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக சுயேச்சை எம்எல்ஏக்களான ஆர்.சங்கர், எச்.நாகேஷ் ஆகியோர் அறிவித்தனர். 

இதனால் ஆட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றாலும், இதைத் தொடர்ந்து காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த ஒருசில எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் சேரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதால், கர்நாடக அரசியலில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. 

பாஜகவின் 104  எம்.எல்.ஏ.க்கள் ஹரியாணா குருகிராம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த 2 நாள்களாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு, அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், மாநில பாஜக தலைவருமான எடியூரப்பாவும் தங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ரமேஷ்ஜார்கிஹோளி, உமேஷ் ஜாதவ் ஆகிய இருவரும் காங்கிரஸ் தலைவர்களின் தொடர்புக்கு சிக்காமல் இருந்துவருவதும் கூட்டணி ஆட்சிக்கு திடீர் குழப்பத்தை ஏற்படுத்தியது பாஜக. 

தும்கூரு ஊரகத் தொகுதி மஜத எம்எல்ஏ கெளரிசங்கரை பாஜக தலைவர்கள் தொடர்புகொண்டு, கட்சித்தாவி பாஜகவுக்கு வந்தால் ரூ.60 கோடி கொடுக்கத் தயாராக இருப்பதாக பேரம் பேசியுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. அதற்கு குதிரைபேரத்தில் ஈடுபடுவது சரியா? பாஜக, ஜனநாயகத்துக்கு எதிரான செயல்படுகளில் ஈடுபட்டுள்ளது. ஆட்சியைக் கவிழ்க்க மேற்கொண்ட முயற்சியை பாஜகவினர் ஒத்துக் கொண்டு, இதுபோன்ற குதிரைபேரம் முயற்சியில் மீண்டுமொருமுறை ஈடுபடவேண்டாம் என்று அக்கட்சிக்கு காங்கிரஸ் கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனர். 

இதனிடையே, “அரசுக்கு ஆபத்து எதுவும் இல்லை. எனது பலம் என்ன என்பது எனக்கு தெரியும். கூட்டணி அரசு வலிமை வாய்ந்ததாக இருக்கிறது. எனவே கவலைப்பட தேவையில்லை. இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவிப்பதால் என்ன நடந்துவிடப்போகிறது? என்று குமாரசாமி கூறியிருந்தார். 

இந்நிலையில், பதவி விவதாலகுவதாக பாஜகவிடம் தெரிவித்திருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேர் பின்வாங்கி விட்டதாகவும், இதனால், கர்நாடகாவில் தாமரையை மலர வைப்பதற்கான மற்றொரு திட்டமும் தோல்வியில் முடிந்துள்ளது. 

இந்நிலையில், எடியூரப்பா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், நாங்கள் யாரையும் இழுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. குதிரை பேரத்தில் முதல்வர் குமாரசாமிதான் ஈடுபடுகிறார். 

பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்றும், பணம் தருவதாகவும், அமைச்சர் பொறுப்பு தருவதாக கூறி மாற்றுக்கட்சி எம்எல்ஏக்களை இழுக்கும் வேலையில் குமாரசாமிதான் ஈடுபட்டு வருகிறார் என எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார். 

கடந்த 7 மாதங்களில், கர்நாடகத்தில் ஆட்சியமைக்கும் பாஜகவின் முயற்சி 2 ஆவது முறையாக தோல்வியடைந்திருப்பதாக அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com