பணத்தை வீசக் கூடாது: மகாராஷ்டிர பார்களில் நடனத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி

பார்களில் ஆபாச நடனத்துக்கு மகாராஷ்டிர அரசு விதித்த தடையை நீக்கியிருக்கும் உச்ச நீதிமன்றம், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
பணத்தை வீசக் கூடாது: மகாராஷ்டிர பார்களில் நடனத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி


புது தில்லி: பார்களில் ஆபாச நடனத்துக்கு மகாராஷ்டிர அரசு விதித்த தடையை நீக்கியிருக்கும் உச்ச நீதிமன்றம், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

பார்களில் நடனம் ஆட அனுமதி வழங்கி, தங்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றக் கோரி பார் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு சில நிபந்தனைகளை விதித்து, அதனைப் பின்பற்றி நடன பார்களை திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, நடன பார்களை மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை மட்டுமே இயக்க வேண்டும் என்றும், கல்வி நிலையங்கள் மற்றும் கோயில்களில் இருந்து 1 கிலோ மீட்டருக்குள் நடன பார்களை திறக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், நடனமாடுபவர்கள் மீது, பார்வையாளர்கள் பணத்தை வீசுவதற்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com