மம்தா மெகா கூட்டம்: கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு? ராகுல் ஆப்ஸென்ட், ஸ்டாலின் பங்கேற்பு!

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவிலும், மாநில அளவிலும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார்.
மம்தா மெகா கூட்டம்: கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு? ராகுல் ஆப்ஸென்ட், ஸ்டாலின் பங்கேற்பு!

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவிலும், மாநில அளவிலும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் ஜனவரி 19-ஆம் தேதி பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பாஜக அல்லாத பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார். 

இந்நிலையில், கம்யூனிஸ்டு கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபோன்று காங்கிரஸ் தலைவர் ராகுலும் இதில் பங்கேற்கப்போவதில்லை. அதுபோன்று சோனியாவும் கலந்துகொள்ளவில்லை. மாறாக அக்கட்சியின்  மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்க உள்ளார். 

மேலும் மாயாவதியும் இதுகுறித்து இன்னும் ஆலோசிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், அகிலேஷ் யாதவ் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோன்று தேவே கௌடா, சந்திரபாபு நாயுடு, தேஜஸ்வி யாதவ், அரவிந்த் கேஜரிவால், ஷரத் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த அடிப்படையில் மம்தா பானர்ஜி தலைமையிலான கூட்டத்திலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தில்லியில் இதேபோன்று காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com