உச்ச நீதிமன்ற புதிய நீதிபதிகளாக தினேஷ் மகேஷ்வரி, சஞ்சீவ் கன்னா பதவியேற்பு

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
உச்ச நீதிமன்ற புதிய நீதிபதிகளாக தினேஷ் மகேஷ்வரி, சஞ்சீவ் கன்னா பதவியேற்பு

புது தில்லி: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

முன்னதாக, இவர்களை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கலாம் என்ற கொலீஜியத்தின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார் என்று மத்திய அரசு கடந்த புதன்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், தினேஷ் மகேஷ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக காலை 10.30 மணிக்கு பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

பல மூத்த நீதிபதிகள் இருக்கின்ற நிலையில் சஞ்சீவ் கன்னாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பி பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 உறுப்பினர்கள் கொண்ட கொலீஜியம் குழு, கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இவர்கள் இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்தது.

கொலீஜியம் குழுவில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். உச்சநீதிமன்றத்துக்கு மொத்தம் 31 நீதிபதிகள் வரை நியமிக்கலாம். இவர்கள் இருவரும் புதிதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டதன் மூலம், தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com