அமெரிக்க உளவுத்துறை மேற்பார்வை குழு உறுப்பினராக ராஜா கிருஷ்ணமூர்த்தி நியமனம்

அமெரிக்க நாடாளுமன்ற உளவுத்துறை மேற்பார்வை குழுவின் உறுப்பினர் பதவிக்கு இந்திய அமெரிக்கரும், ஜனநாயக கட்சி
அமெரிக்க உளவுத்துறை மேற்பார்வை குழு உறுப்பினராக ராஜா கிருஷ்ணமூர்த்தி நியமனம்


அமெரிக்க நாடாளுமன்ற உளவுத்துறை மேற்பார்வை குழுவின் உறுப்பினர் பதவிக்கு இந்திய அமெரிக்கரும், ஜனநாயக கட்சி எம்.பி.யுமான ராஜா கிருஷ்ணமூர்த்தி(45) நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் முக்கிய குழுவான உளவுத்துறை மேற்பார்வை குழுவில் தெற்காசியாவில் இருந்து நியமிக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமை இவரையேச் சாரும். 
அமெரிக்காவில் உள்ள 17 உளவுத்துறை அமைப்புகளின் நடவடிக்கைகள் மற்றும் பட்ஜெட் ஆகியவற்றை மேற்பார்வையிடுவதற்கான நாடாளுமன்ற உளவுத்துறை குழுவில் ஜனநாயக கட்சியை சேர்ந்த 4 எம்.பி.க்கள் நியமிக்கப்பட்டனர். அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்ஸி பலோஸி, ராஜா கிருஷ்ணமூர்த்தியை அந்த குழுவின் உறுப்பினராக புதன்கிழமை நியமித்தார். 
நியமனத்துக்கு பின்பு ராஜா கூறுகையில், எனது மீது நம்பிக்கை வைத்து நாட்டின் அதிகாரமிக்க குழுவில் உறுப்பினராக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து விதமான பிரச்னைகளில் இருந்தும் நாட்டை பாதுகாப்பேன் என்று எம்.பி.யாக பதவியேற்கும்போது உறுதிமொழி ஏற்றேன். அதன்படி நாட்டின் பாதுகாப்புக்கு எனது பங்களிப்பை அளிப்பேன். எனது சக உறுப்பினர்களுடன் இணைந்து சிறப்பான முறையில் பணியாற்றுவேன் என்றார்.
தில்லியில் தமிழ் குடும்பத்தில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, சிறு வயதிலேயே அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் ஜனநாயக கட்சியில் இணைந்த அவர், இலினாய்ஸ் 8-ஆவது மாவட்டத்தின் எம்.பி.யாக கடந்த 2017-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com