பெங்களூரில் இன்று காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு கூட்டம்

கர்நாடக காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு கூட்டம் பெங்களூரில் வெள்ளிக்கிழமை (ஜன.17) நடைபெறுகிறது.


கர்நாடக காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு கூட்டம் பெங்களூரில் வெள்ளிக்கிழமை (ஜன.17) நடைபெறுகிறது.
முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றுள்ளதாலும், அமைச்சர் பதவிக் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் பாஜகவில் இணையவுள்ளதாக எழுந்த தகவலின் அடிப்படையில் இந்த அவசரக் கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.
விதான செளதாவில் நடைபெறும் இக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 80 பேரையும் கலந்து கொள்ள வைத்து, ஊடகங்கள் முன் நிறுத்தி யாரும் பாஜகவுக்கு செல்லவில்லை; அனைவரும் ஒற்றுமையாக உள்ளதாக உறுதிப்படுத்த சித்தராமையா திட்டமிட்டிருக்கிறார். 
இக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
அதில் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்படி பதவியை இழந்தால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு யாரும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்பதால் இக்கூட்டத்தில் கண்டிப்பாக அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழு குறிப்பிட்டுள்ளது.
இச்சூழலில் பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com