அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு: இம்மாத இறுதிக்குள் இலக்கை எட்ட வாய்ப்பு

அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு: இம்மாத இறுதிக்குள் இலக்கை எட்ட வாய்ப்பு

அனைத்து வீடுகளும் மின்இணைப்பு பெற வேண்டும் என்ற இலக்கை இம்மாத இறுதிக்குள் இந்தியா எட்டிவிடும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

அனைத்து வீடுகளும் மின்இணைப்பு பெற வேண்டும் என்ற இலக்கை இம்மாத இறுதிக்குள் இந்தியா எட்டிவிடும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தொலைதூரப் பகுதிகளில் உள்ள கிராமங்களிலும், நகரங்களிலும் மின் இணைப்பு பெறாமல் உள்ள வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்குவதற்காக, செüபாக்யா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டில் கொண்டு வந்தது. அதன்படி, எஞ்சியிருந்த 2.48 கோடி வீடுகளுக்கு 2019 மார்ச் இறுதிக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, சிம்லாவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மாநில மின்சாரத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில், அனைத்து வீடுகளுக்கும் 2018 டிசம்பர் இறுதிக்குள் மின்இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால், சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றதாலும், சில இடங்களில் நக்ஸல்களின் இடையூறுகளாலும், சில ஒப்பந்த பிரச்னைகளாலும் கடந்த டிசம்பர் இறுதிக்குள் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியவில்லை.
இதுவரை, மொத்தமுள்ள 2.48 கோடி வீடுகளில் 2.44 கோடி வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. இதற்காக, ரூ.16,320 கோடி செலவாகியுள்ளது. தினந்தோறும் சுமார் 30,000 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இம்மாத இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது. 
அதன் பிறகு அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது என்ற இலக்கை இந்தியா எட்டி விடும் என்று அந்த அதிகாரி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com