இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக முன்பாகவே இந்தியா திரும்பிவிடுவார் அருண்ஜேட்லி

மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி, மருத்துவ பரிசோதனைக்காக திடீர் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள அருண் ஜேட்லி
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக முன்பாகவே இந்தியா திரும்பிவிடுவார் அருண்ஜேட்லி


மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி, மருத்துவ பரிசோதனைக்காக திடீர் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள அருண் ஜேட்லி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இந்தியா திரும்பிவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

66 வயதாகும் ஜேட்லிக்கு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர், முதல்முறையாக திடீர் பயணமாக மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் ஜேட்லி.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள், வழக்கமான பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ள ஜேட்லி, வார இறுதியில் அவர் நாடு திரும்புவார் கூறியுள்ளன. 

வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,  ஜேட்லி, அமெரிக்காவுக்கு சென்றிருப்பதால் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வது யார் என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுந்தது.

இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ள ஜேட்லி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக பிப்ரவரி 1 ஆம் தேதி முன்பாக இந்தியா திரும்பி விடுவார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com