காங்கிரஸில் இருந்து நீக்கம் எதிரொலி: ராகுலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் எச்சரிக்கை

காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒடிஸாவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான ஸ்ரீகாந்த் ஜேனா, கோரபுட் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ண சந்திர சகாரியா ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, காங்கிரஸில் இருந்து அண்மையில் நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், புவனேசுவரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது ஸ்ரீகாந்த் ஜேனா  கூறியதாவது:
ஒடிஸா மாநிலத்துக்கு வரும் 25ஆம் தேதி ராகுல் காந்தி வருகை தரவுள்ளார் என்பது எனக்குத் தெரியும். அன்றைய தினத்தில் ராகுல் காந்தியின் சுயரூபத்தை வெட்ட வெளிச்சமாக்க போகிறேன். அதன்பிறகு, அவரால் பொது வெளியில் தனது முகத்தை காட்ட முடியாது.
சுரங்க மாபியாக்கள் குறித்து ராகுலின் கவனத்துக்கு பலமுறை எடுத்துச் சென்றேன். இந்த விவகாரத்தில் எனது மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம், சுரங்க மாபியாக்களுக்கு ஆதரவளிக்கப் போவதை ராகுல் தெளிவாக தெரிவித்துள்ளார்.
ஒடிஸாவை தொடர்ந்து ஆளும் பொறுப்பை பிஜு ஜனதா தளத்திடம் அளிப்பதென்று  ராகுல் காந்தி முடிவெடுத்துள்ளார். இதனால்தான் பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக்குடன் மகா கூட்டணி அமைக்க போவதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார் என்றார் அவர். ஆனால் ராகுல் காந்தி தொடர்பாக எந்தத் தகவலை வெளியிட இருக்கிறார் என்ற தகவலை ஸ்ரீகாந்த் ஜேனா வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com