ம.பி.யில் 27 மக்களவை தொகுதிகளில் பாஜக வெற்றி: சௌஹான் உறுதி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் குறைந்தபட்சம் 27 மக்களவைத் தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.
புது தில்லியில் பாஜக இளைஞரணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி மூத்த தலைவர் சிவ்ராஜ் சிங் செüஹானுக்கு வரவேற்பளிக்கும் தில்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி. உடன் நாடாளுமன்ற விவகாரத
புது தில்லியில் பாஜக இளைஞரணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி மூத்த தலைவர் சிவ்ராஜ் சிங் செüஹானுக்கு வரவேற்பளிக்கும் தில்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி. உடன் நாடாளுமன்ற விவகாரத

மத்தியப் பிரதேச மாநிலத்தில் குறைந்தபட்சம் 27 மக்களவைத் தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.
தில்லியில் நடைபெற்ற பாஜக இளைஞர் அமைப்பின் பேரணியில், இதுகுறித்து அவர் பேசியதாவது: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்திருக்கலாம். ஆனால் அக்கட்சிக்கு போதிய பெரும்பான்மை கிடையாது. ஆதலால் எந்நேரமும் காங்கிரஸ் அரசு கவிழலாம்.
நான் பலவீனமாகி விட்டதாக நினைக்க வேண்டாம். வரும் மக்களவைத் தேர்தலில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில் குறைந்தபட்சம் 27 தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெறும். 
மத்தியப் பிரதேசத்தில் பாஜக நினைத்திருந்தால், தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இதற்கு காரணம், மாநிலத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மை பலம் பெற்றிருக்க வேண்டும் என்று பாஜக கருதியது.
கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் பேரணி, மாப்பிள்ளை இல்லாத திருமணம் போல இருந்தது. ஆனால் எங்கள் தரப்பில், போர்க்களத்தில் கட்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார் என்றார் சிவ்ராஜ் சிங் சௌஹான்.
தில்லியில் பாஜகவால் கடந்த 2 மாதத்தில் நடத்தப்படும் 5ஆவது பிரமாண்ட பேரணி இதுவாகும். அதேநேரத்தில், பேரணிக்கு எதிர்பார்த்தது போல அதிக அளவில் கூட்டம் வரவில்லை. இதுகுறித்து தில்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், தலைவர்கள் உரை நிகழ்த்துகையில் கட்சியினர் யார் எழுந்து சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
அதேநேரத்தில், தில்லி மாநில பாஜக இளைஞரணி தலைவர் சுனில் யாதவ், இப்பேரணியில் 20,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இப்பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் போல 40 அடி உயர உருவப் பொம்மை, தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் உருவ பொம்மை ஆகியவற்றை எரிக்க பாஜக இளைஞரணியினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அத்திட்டத்தை கைவிட்டு விட்டதாக சுனில் யாதவ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com