ராம நவமியன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்க விஹெச்பி முடிவு?

ராம நவமி தினமான வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின்

ராம நவமி தினமான வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தர்மசபை கூட்டத்தில் விரைவில் முடிவு எடுக்கப்பட இருக்கிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தால், அக்கட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று விஹெச்பி தெரிவித்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கு வரும் 29-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், விஹெச்பி அமைப்பு கோயில் கட்டும் பணியை தொடங்க முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின்  செயல் தலைவர் அலோக் குமார் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு அரசியல் கட்சியினரை நாங்கள் சந்தித்து வருகிறோம். இந்த விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்டு, சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். இந்த விஷயத்தில் ஆர்வம் எடுத்துக் கொள்ளும் அனைவருக்கும் நன்றி. 
அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் கட்டும்வதையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். காங்கிரஸ் கட்சி தங்கள் தேர்தல் அறிக்கையில் இதனைத் தெரிவித்தால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிப்போம் என்றார். 
இதனிடையே விஹெச்பி அமைப்பின் தர்மசபை கூட்டம் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் (அலாகாபாத்) ஜனவரி 31, பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வரும் ராம நவமி (ஏப்ரல் 13) தினத்தில் அயோத்தில் ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்குவது குறித்து அப்போது முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com