Enable Javscript for better performance
கோயிலை சுத்தம் செய்த சடங்கு: சபரிமலை தந்திரி பதிலளிக்க கூடுதல் அவகாசம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கோயிலை சுத்தம் செய்த சடங்கு: சபரிமலை தந்திரி பதிலளிக்க கூடுதல் அவகாசம்

    By DIN  |   Published On : 22nd January 2019 12:59 AM  |   Last Updated : 22nd January 2019 12:59 AM  |  அ+அ அ-  |  


    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் 2 பேர் வழிபாடு நடத்தியதைத் தொடர்ந்து, கோயிலை சுத்தப்படுத்திய விவகாரம் குறித்து பதிலளிக்க அக்கோயில் தந்திரிக்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு 2 வாரம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.
    சபரிமலை ஐயப்பன் கோயிலில் போலீஸார் உதவியுடன், பாரம்பரிய வழக்கத்தை மீறி, பிந்து, கனகதுர்கா ஆகிய 2 பெண்கள், இம்மாதம் 2ஆம் தேதி வழிபாடு நடத்தினர். இதைத் தொடர்ந்து, சபரிமலை கோயில் கருவறை அடைக்கப்பட்டு, கோயில் வளாகத்தை சுத்தப்படுத்தும் சடங்கு நடைபெற்றது. கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு உத்தரவின்பேரில் இது மேற்கொள்ளப்பட்டது.
    இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், தேவஸ்வம் வாரிய அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். கேரள மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையமும், இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு தந்திரி தரப்பில் பதிலளிக்கப்படவில்லை. தந்திரி கண்டரரு ராஜீவரிடம், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும் விளக்கம் கேட்டிருந்தது.
    இதனிடையே, மகர விளக்கு பூஜைகள் நிறைவடைந்து சபரிமலை கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரிடம் விளக்கம் கேட்டு அளிக்கப்பட்ட கால அவகாசம் திங்கள்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், பதிலளிக்க அவருக்கு மேலும் 2 வார கால அவகாசத்தை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அளித்துள்ளது.
    இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் ஏ. பத்மகுமார் கூறுகையில், மகர விளக்கு பூஜைக் காலத்தையொட்டி சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டிருந்ததால் 20-ஆம் தேதி வரை தந்திரி தனது பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். பூஜைக் காலம் நிறைவடைந்து கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகே, அவருக்கு ஓய்வு கிடைக்கும். ஆதலால் தனக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என தந்திரி கேட்டிருந்தார். இதைக் கருத்தில் கொண்டு, விளக்கமளிக்க கூடுதலாக 15 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp