Enable Javscript for better performance
வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

    By DIN  |   Published On : 22nd January 2019 01:08 AM  |   Last Updated : 22nd January 2019 01:08 AM  |  அ+அ அ-  |  

    thiruvarur Assembly by election cancelled


    இந்தியத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்றும்; கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றதாகவும் சையது சுஜா என்ற இந்திய மின்னணு தொழில்நுட்ப நிபுணர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாரத மின்னணு நிறுவனம் மற்றும் இந்திய மின்னணு கழகம் ஆகியவற்றால் கடுமையான கண்காணிப்பு-பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படுகின்றன. தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் மிக கவனமான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. 
    மின்னணு துறையில் புகழ்பெற்ற நிபுணர்கள் அடங்கிய குழு, இந்த நடைமுறைகளை கண்காணிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மேலும், சையது சுஜா விவகாரத்தில் சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது என்ன நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
    காங்கிரஸின் திகில் நாடகம்: தொழில்நுட்ப நிபுணர் சையது சுஜாவின் பேட்டி, காங்கிரஸ் நடத்திய திகில் நாடகம் என்று பாஜக விமர்சித்துள்ளது.
    இதுதொடர்பாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது: 
    எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வி உறுதியாகிவிட்டது. எனவே, தோல்விக்கு கூற வேண்டிய காரணங்களை இப்போதே அவர்கள் தேட ஆரம்பித்துவிட்டனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான குற்றச்சாட்டுகள், இந்தியாவையும் இந்தியர்களையும் அவமதிக்கும் வகையிலானவை. அதுபோன்ற முயற்சிகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம்.
    லண்டனில் நடைபெற்ற பேட்டியின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபலும் இருந்துள்ளார். அது தற்செயலான நிகழ்வு அல்ல. ராகுல், சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அவரை அனுப்பி வைத்திருக்கலாம்.
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மையை கெடுக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சி உள்நாட்டில் பலிக்கவில்லை. இதனால், வெளிநாட்டிலிருந்து நமது தேர்தல் நடைமுறையை அவமதிக்க முயலுகின்றனர் என்றார் முக்தார் அப்பாஸ் நக்வி.
    மேலும், மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே கொலை செய்யப்பட்டதாக, சையது சுஜா முன்வைத்த குற்றச்சாட்டையும் நக்வி மறுத்துள்ளார். 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp