எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் மோடி அச்சம்: சிவசேனை தாக்கு

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, பிரதமர் நரேந்திர மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சிவசேனை விமர்சித்துள்ளது.


எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, பிரதமர் நரேந்திர மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சிவசேனை விமர்சித்துள்ளது.
மத்தியிலும், மகாராஷ்டிரத்திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனை, அண்மைக் காலமாக பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை விமர்சித்து வருகிறது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் திங்கள்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அண்மையில் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சிகளில் பெரும்பாலானவை, ஒரு காலத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தவைதான். அந்தக் கட்சிகள் தேசத்துக்கு எதிரானவை என்று இப்போது நீங்கள் (பாஜக) விமர்சிப்பது ஏன்? எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கண்டு, பிரதமர் மோடி அஞ்சுவது ஏன்? தனது அரசுக்கு வீழ்ச்சியே கிடையாது என்ற கற்பனையில் அவர் இருக்கிறார்.
எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க சிவசேனைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மம்தா அணியில் உள்ளவர்கள், மதச்சார்பின்மை கொள்கையை கொண்டவர்கள். ஆனால், ஹிந்துத்துவமே எங்களது சிந்தாந்தம். ராமர் கோயில், பொதுச் சிவில் சட்டம் ஆகிய விவகாரங்களில் எங்களது நிலைப்பாடு உறுதியானது. நாங்கள் போலி மதசார்பின்மைவாதியாக செயல்பட மாட்டோம் என்று அந்த தலையங்கத்தில் சிவசேனை கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com