மத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் 

​மத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். 
மத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் 


மத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். 

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சிகிச்சை எடுப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அதேசமயம், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதனால், இடைக்கால பட்ஜெட்டை யார் தாக்கல் செய்வார் என்ற கேள்வி எழுந்தது. 

இதனிடையே, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்குள் அருண் ஜேட்லி இந்தியா திரும்பிவிடுவார் என்றும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், மத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே, நிலக்கரித்துறை மற்றும் ரயில்வே துறையை கவனிக்கப்பட்டு வருவதால் கூடுதல் பொறுப்பாக நிதித்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அருண் ஜேட்லி, இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டபோதும், அவருடைய நிதித்துறை பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டது. அருண் ஜேட்லி சிகிச்சை பெற்று திரும்பிய பிறகு, மீண்டும் நிதித்துறை பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com