அனைத்து வங்காள அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை அளிக்கப்படும்: அமித் ஷா 

அனைத்து வங்காள அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.
மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.


அனைத்து வங்காள அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம், மால்டாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
குடியுரிமை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறினால், அனைத்து வங்காள அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை அளிக்கப்படும். மேற்குவங்கத்தில் ஆட்சியிலிருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, அகதிகளின் நலனுக்கு எதையும் செய்யவில்லை. ஆனால், பாஜக அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும்.
கொல்கத்தாவில் அண்மையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பேசியோர் அனைவரும், மோடி மோடி என்றே முழக்கமிட்டனர். எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியானது, ஆட்சி அதிகாரத்துக்காகவும், தனிநபர் நலன்களை காக்கவுமே அமைக்கப்பட்டுள்ளது. பேராசை, பதவி சுகம் ஆகியவற்றுக்காகவே மகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து மோடியை அகற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். ஆனால் பாஜகவின் திட்டமோ, நாட்டில் இருந்து வறுமை, ஊழலை அகற்ற வேண்டும் என்பதுதான்.
மேற்குவங்கத்தில் ஆட்சியிலிருக்கும் திரிணமூல் காங்கிரஸ் அரசு, கொலைகளுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் அரசாகும். தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அரசு அகற்றப்படும் என்றார் அமித் ஷா.
தில்லி திரும்பினார் அமித் ஷா: இதனிடையே, மேற்குவங்க பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு அமித் ஷா செவ்வாய்க்கிழமை மாலை தில்லிக்கு அவசரமாக திரும்பினார். இதுகுறித்து பாஜகவின் மேற்குவங்க மாநிலத் தலைவர் திலிப் கோஷ் கூறுகையில், அமித் ஷாவுக்கு காய்ச்சல் அதிகமாக உள்ளது. இருப்பினும், இன்றைய கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். 
இந்நிலையில், அமித் ஷாவை மேலும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, தில்லிக்கு புறப்பட்டு சென்றார். நாளை அவரது உடல்நிலை சரியாகும்பட்சத்தில், ஜார்கம் பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என்றார்.
மேற்குவங்கத்தில் செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேச அமித் ஷா திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், தில்லிக்கு அமித் ஷா புறப்பட்டுச் சென்றிருப்பதால், ஜார்கம் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வதில் சந்தேகம் நிலவுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com