தில்லியில் நேதாஜி நினைவு அருங்காட்சியகத்தை துவக்கி வைத்தார் மோடி

தில்லியில்  நேதாஜி நினைவு அருங்காட்சியகத்தை புதனன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
தில்லியில் நேதாஜி நினைவு அருங்காட்சியகத்தை துவக்கி வைத்தார் மோடி

புது தில்லி: தில்லியில்  நேதாஜி நினைவு அருங்காட்சியகத்தை புதனன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் 'இந்திய தேசிய ராணுவம்' என்ற படைப்பிரிவை துவக்கி ஆயுதப் போராட்டத்தில் மகத்தான பங்கு வகித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவரது பிறந்தநாளான இன்று அவரது நினைவை போற்றும் வகையிலும் தில்லி செங்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இந்த அருங்காட்சியகத்தில் முதலாம் உலகப்போர் தொடர்பான சிறப்பு புகைப்படங்களும், முதலாம் உலகப்போரின்போது இந்தியாவின் கவிக்குயில் சரோஜினி நாயுடு இயற்றிய எழுச்சி கீதமும் இடம்பெற்றுள்ளது.

அதேபோல இந்திய வரலாற்றில் கருப்பு தினமான ஜாலியன் வாலாபாக் தினத்தினை நினைவு கூறும் வகையில்  ஜாலியன்வாலாபாக் நினைவு அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.   
 
இவை இரண்டையும் திறந்துவைத்த பிரதமர் மோடி ஒருமணி நேரத்திற்கு மேலாக இங்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு நினைவுக்குறிப்புகளை பார்வையிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com