பால் தாக்கரே நினைவு மண்டபம் கட்ட ரூ.100 கோடி: மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல்

சிவசேனையின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேவுக்கு ரூ.100 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய மகாராஷ்டிர அமைச்சரவை செவ்வாய்க்கிழமை
பால் தாக்கரே நினைவு மண்டபம் கட்ட ரூ.100 கோடி: மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல்


சிவசேனையின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேவுக்கு ரூ.100 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய மகாராஷ்டிர அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது. 
மும்பையில் மகாராஷ்டிர அரசின் அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்ததும், இதனை நிதி அமைச்சர் சுதிர் முங்கந்திவார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பாஜகவுக்கும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனைக்கும் இடையே சுமூகமான உறவு நீடித்து வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலின் போது இரு கட்சிக்கும் இடையே கூட்டணி நீடிக்கவே அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில், எப்போதும் சிவசேனையுடன் கூட்டணியில் நீடிக்கவே பாஜக விரும்புகிறது என்று தெரிவித்தார். மறைந்த பால் தாக்கரே சிவசேனை கட்சிக்கு மட்டும் தலைவர் அல்ல; இந்த கூட்டணிக்கும் அவரே தலைவர். அனைத்து அரசியல் கட்சிகளின் மத்தியிலும், முக்கியத்துவம் வாய்ந்த நபராக அவர் திகழ்ந்தார். இளைஞர்களின் எழுச்சி நாயகனாக வலம் வந்த பால்தாக்ரேயின் நினைவாக நினைவு மண்டபம் எழுப்ப ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிதியை மும்பை பெருநகர பிராந்திய வளர்ச்சி ஆணையம் (எம்எம்ஆர்டிஏ) மற்றும் மாநில அரசு இணைந்து வழங்கும் என பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். அண்மைக்காலமாக, பாஜகவின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனை கட்சி மத்திய, மாநில பாஜக அரசுகளை கடுமையாக விமர்சித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, வரும் தேர்தல்களில் சிவசேனை தனித்து போட்டியிட விரும்புவதாக தெரிவித்திருந்தார். 
இதுகுறித்து முங்கந்திவர் கூறுகையில், இருகட்சிகளும் தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு எதிர்க்கட்சிகளை வீழ்த்துவோம். பால் தாக்கரேக்கு நினைவு மண்டபம் எழுப்புவது தொடர்பான முடிவுக்கு சிவசேனையை சேர்ந்த அமைச்சர்களும் ஆதரவளித்தனர். 
இந்த நினைவு மண்டபம் மும்பை மேயர் பங்களா அருகிலுள்ள சிவாஜி பூங்கா பகுதியில் சுமார் 11,500 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும். பின்னர், பாலசாஹேப் தாக்கரே ராஷ்ட்ரீய ஸ்மாரக் நியாஸ் அறக்கட்டளை மூலம் பராமரிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com