இந்த ஆண்டு நாட்டுக்கு மிக முக்கியமான ஆண்டு: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

இந்த ஆண்டு அதாவது 2019 நாட்டுக்கு மிக முக்கியமான ஆண்டாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு நாட்டுக்கு மிக முக்கியமான ஆண்டு: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை


புது தில்லி: இந்த ஆண்டு அதாவது 2019 நாட்டுக்கு மிக முக்கியமான ஆண்டாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர் கூறியதாவது, சாமானிய மக்களின் வாழ்வு மாற வேண்டும் என்பதே மத்திய அரசின் முக்கியக் கொள்கை. ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் பல கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். மக்களின் ஆரோக்கியம் காப்பதுதான் மத்திய அரசின் முக்கியக் கடமையாக உள்ளது.

புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அம்பேத்கர் மற்றும் காந்தியின் கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தால் 6 கோடி மக்கள் பயனடைந்தார்கள். நாடு முழுவதும் 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. விலைவாசி உயர்வை மத்திய அரசு மிகத் திறமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு குடும்பம் கூட மின்சார வசதி இல்லாமல் அவதிப்படக் கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு முன்பு வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசும் பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com