சுடச்சுட

  

  எல்லைப் பகுதியில் நிகழாண்டில் பாகிஸ்தான் 1,248 முறை அத்துமீறல்:  ராஜ்நாத் சிங்

  By DIN  |   Published on : 02nd July 2019 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Rajnath Singh meeting


  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையொட்டிய எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் நிகழாண்டில் பாகிஸ்தான் 1,248 முறை அத்துமீறி தாக்குதல்கள் நடத்தியிருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் நிகழாண்டில் பாகிஸ்தான் 1,248 முறை அத்துமீறி தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இதில் இந்தியத் தரப்பில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
  கடந்த ஜனவரி மாதத்தில் 203 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பிப்ரவரி மாதம் 215 முறையும், மார்ச் மாதம் 267 முறையும், ஏப்ரல் மாதம் 234 முறையும், மே மாதம் 221 முறையும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.
  ஜூன் மாதம் 108 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. மேற்கண்ட அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் படையினரின் அத்துமீறல்கள் குறித்து அந்நாட்டு ராணுவ உயரதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது புகார் தெரிவிக்கப்பட்டது.
  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின்போது, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 34 பேர் பலியாகியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் இதே காலக்கட்டத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு வீரர்கள், ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்தப் பதிலில் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai