சுடச்சுட

  
  twitter


  ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகள் 6 பேர், தங்களது பெயரில் அதிகாரப்பூர்வ சுட்டுரை (டுவிட்டர்) பக்கங்களை தொடங்கியுள்ளனர். 
  ஆர்எஸ்எஸ் முக்கிய தலைவர்களின் பெயரிலான போலி சுட்டுரை பக்கங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில், அதிகாரப்பூர்வ சுட்டுரை பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் சுரேஷ் ஜோஷி, இணை பொதுச் செயலாளர்கள் சுரேஷ் சோனி, கிருஷ்ண கோபால், வி.பாகய்யா, மூத்த நிர்வாகிகள் அருண் குமார், அனிருத் தேஷ்பாண்டே ஆகியோர், அதிகாரப்பூர்வ சுட்டுரை பக்கங்களை தொடங்கியுள்ளனர்.
   ஆர்எஸ்எஸ் இணைச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபளே ஏற்கெனவே சுட்டுரையில் இணைந்துவிட்ட நிலையில், தற்போது மோகன் பாகவத் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.
  ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ சுட்டுரை பக்கத்தை சுமார் 13 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இதில், அந்த அமைப்பின் அறிக்கைகள் மற்றும் இதர விவரங்கள் வெளியிடப்படுகின்றன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai