சுடச்சுட

  

  வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை ரூ.14,578 கோடி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

  By DIN  |   Published on : 02nd July 2019 04:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nirmala1

  கோப்புப் படம்


  2018ஆம் ஆண்டில் வங்கிகளில் உரிமைக் கோரப்படாத வைப்புத்தொகை ரூ.14,578 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், முந்தைய ஆண்டை விட இத்தொகை 27 % அதிகம் என்றும் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  
  உரிமை கோரப்படாத வைப்புத்தொகை கடந்த 2017ஆம் ஆண்டில் ரூ.11,494 கோடியாகவும், 2016-ஆம் ஆண்டில் ரூ.8,928 கோடியாகவும் இருந்ததாக அவர் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார். 
  இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: 
  2018ஆம் ஆண்டு முடிவில் பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் உரிமை கோரப்படாத வைப்புத்தொகையாக ரூ.2,156.33 கோடி இருந்தது.  ஆயுள் காப்பீட்டுப் பிரிவில், உரிமை கோரப்படாமல் மொத்தம் ரூ.16,887.66 கோடி உள்ளது.  
  10 ஆண்டுக்கும் மேலாக வங்கியில் உரிமை கோரப்படாமல் வைப்புத்தொகை இருந்தால், அந்த தொகை  வைப்புத்தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியாக (டிஇஏஎஃப்) மாற்றப்படுகிறது ஆயினும், ஏதேனும் வாடிக்கையாளர் தனது வைப்புத் தொகைக்கு உரியை கொண்டாடி வந்தால், அவரது தொகை வட்டியுடன் அளிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை என்றார் அவர்.
  மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளில் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை 2018-19ஆம் ஆண்டில் 739 ஆக குறைந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 1,545 ஆக இருந்தது. அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளால் மொத்தமாக ரூ.2,06,586 கோடி வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai