அமர்நாத் யாத்திரை: 2வது குழு புறப்பட்டது

பனி லிங்கத்தை தரிப்பதற்காக மலை அடிவாரத்திலிருந்து 4,417 யாத்ரீகர்கள் அடங்கிய இரண்டாவது குழு அமர்நாத் யாத்திரைக்கு திங்கள்கிழமை புறப்பட்டது.
அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுவரும் யாத்ரீகர்களுக்காக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சிஆர்பிஎஃப் வீரர்கள். நாள்: திங்கள்கிழமை

3,880 மீட்டர் உயரத்தில் இருக்கும் அமர்நாத் பனி லிங்கத்தை தரிப்பதற்காக இந்த ஆண்டு 1.5 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் முன்பதிவு செய்துகொண்டுள்ளனர்.

பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கும் அமர்நாத் யாத்திரை, பலத்த பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

3,543 பேர் ஆண்கள், 843 பேர் பெண்கள், 31 பேர் குழந்தைகள் இரண்டாவது குழுவில் இடம்பெற்றுள்ளனர். பகவதி நகர் முகாமிலிருந்து இவர்கள் 142 வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். பஹல்காம், பல்தால் ஆகிய வழிப் பாதைகளில் இவர்கள் செல்வார்கள். சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர். அமர்நாத் யாத்திரை ஆகஸ்டு 15ஆம் தேதி நிறைவடையவுள்ளது.  ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், பனிலிங்கத்தை தரிசனம் செய்தார்.

ஸ்ரீஅமர்நாத் கோயில் வாரியத்தின் தலைவரும் அவர்தான். ஜம்மு-காஷ்மீர் அமைதியாகவும், நல்லிணக்கத்துடனும் திகழ பிரார்த்தனை செய்ததாக ஆளுநர் தெரிவித்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com