ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் கீழ் குறைந்தது

வரி வசூல் சுணக்க நிலையை எடுத்துக் காட்டும் வகையில், கடந்த ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் கீழ் சரிந்துள்ளது. 

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது: சரக்கு மற்றும் சேவை வரி வசூல் சென்ற ஜூன் மாதத்தில் ரூ.99,939 கோடியாக இருந்தது. இது, முந்தைய மே மாதத்தில் ரூ.1,00,289 கோடியாகவும், கடந்தாண்டு ஜூனில் ரூ.95,610 கோடியாகவும் காணப்பட்டது.
ஜூனில் வசூலான ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாயில்,  மத்திய-ஜிஎஸ்டி ரூ.18,366 கோடியாகவும், மாநில-ஜிஎஸ்டி ரூ.25,343 கோடியாகவும், ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி ரூ.47,772 கோடியாகவும் (இறக்குமதி மூலம் வசூலான ரூ.21,980 கோடியும் அடங்கும்), தீர்வை ரூ.8,457 கோடியாகவும் (இறக்குமதி மூலம் வசூலான ரூ.876 கோடியும் அடங்கும்) இருந்தது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com